📢 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி (05.09.2026) ஆசிரியர் தின விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க ஏதுவாக, ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப் பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
📋 விருது குறித்த முக்கிய விவரங்கள்:
விருது மற்றும் பரிசுகள்
சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படி ஆகியவை வழங்கப்படும்.
தகுதியான பள்ளிகள்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைப் பள்ளிகள்.
தேர்வு முறை
இந்த நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களைத் தேர்வு செய்திட, அரசாணையின்படி 38 வருவாய் மாவட்டங்களுக்கான விருதுகள் நிர்ணயம் செய்யப்பட்டு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
📌 முக்கிய குறிப்பு: நடப்புக் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருதுக்கு (Best Teacher Award) தங்களை முன்னிறுத்த விரும்பும் ஆசிரியர்கள், இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலமாகத் தங்களின் அனைத்து விவரங்களையும் EMIS தளத்தில் நேரடியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
0 Comments