மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

School Holiday Announcement Tamil Nadu

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

🎉 உள்ளூர் விடுமுறை நாள்

28.07.2026 (செவ்வாய்க்கிழமை)

💼 ஈடுசெய்யும் வேலை நாள்

01.08.2026 (சனிக்கிழமை)

தமிழகத்தின் தொன்மையான வழிபாட்டு மரபுகளும், வட்டார ரீதியாக கொண்டாடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாக்களும் மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை ஆகும். அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் வெகுசன திருவிழாவிற்கு மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.

ஆடித் தபசு சிறப்பு: சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக, ஆதிசக்தி கோமதி அம்மனாக வடிவெடுத்து தவமிருந்த தெய்வீக நிகழ்வைப் போற்றும் திருவிழாவாகும். இப்புனிதத் திருவிழா, ஆடி மாதத்தில் சங்கரன்கோவில் திருத்தலத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

யாருக்கெல்லாம் விடுமுறை பொருந்தாது?

▪️ அன்றைய தினம் அரசுத் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

▪️ இந்த விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு விடுமுறை பொருந்தாது, வழக்கம்போல் செயல்படும்.

▪️ மாவட்டக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அவசரப் பணிகளுக்காகச் செயல்படும்.

Tenkasi District Collector Local Holiday Order