தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 'டெட்' (TET) தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கத் தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
செய்திச் சுருக்கம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் முழுமையான விவரங்களை விரைந்து சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகள் மற்றும் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
தற்போது இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் (Promotions) விரைவில் வழங்கப்படலாம் என ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் பதவி உயர்வுகள்:
🎓 பட்டதாரி ஆசிரியர்
(B.T. Assistant)
🏫 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்
(Primary School HM)
🏢 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்
(Middle School HM)
பத்திரிக்கை செய்தி:
0 Comments