SMC - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (10.07.2026) கூட்டப்பொருள்
பள்ளி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்து, பள்ளிக்கு வராத அல்லது பள்ளியை விட்டு விலகிய குழந்தைகளை அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
மாணவர்களின் தொடர்ச்சியான வருகையை உறுதி செய்தல். இடைநிற்றலுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுதல், பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் 100% சேர்க்கை-0% இடைநிற்றல் என்ற இலக்கை அடைய தேவையான செயல்திட்டங்களை வகுத்தல்.
a) தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன் இணைந்து - நிதி உதவி, சான்றிதழ்கள் அல்லது பெற்றோர் அனுமதி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை அடையாளம் கண்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் சிறப்பு மாணவர் குறைதீர்ப்பு முகாம்களில் பங்கேற்கச் செய்து அவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதி செய்தல்.
b) பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதை உறுதி செய்தல்.
c) மாவட்ட உயர்கல்வி கட்டுப்பாட்டு அறைகள் (DCRs) குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவி தேவைப்படும் மாணவர்களை உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புதல் வேண்டும்.
d) பெற்றோர் ஆதரவு இல்லாதோர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் (CWSN) மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதி செய்தல்.
a) 10ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும் தேர்வில் தவறாமல் கலந்துகொள்ள பெற்றோர்களும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளுதல்.
b) மாணவர்கள் வெற்றி பெறுவதற்காக "மணற்கேணி" செயலியின் "தொடர்ந்து கற்போம்" பகுதியில் உள்ள குறைந்தபட்சக் கற்றல் கையேடுகளை (MLM) பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும். மேலும், மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் நேர்மறை மனப்பாங்கையும் வளர்க்க ஆதரவு வழங்க வேண்டும்.
a) பள்ளியில் பயிலும் ஆட்டிச நிலை மற்றும் அறிவுசார் குறைபாடு கொண்ட மாணவர்கள் மற்றும் UDID அட்டை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை SMC உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.
b) ஆட்டிசம் குறித்த உண்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் UDID (Unique Disability ID Card) அட்டையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
c) UDID பெறுவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விவாதித்து, UDID தேவைப்படும் அனைத்து மாணவர்களும் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
அரசுப் பள்ளிகளின் மீது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பள்ளி வளர்ச்சி மற்றும் பல்வேறு முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் அரசுப் பள்ளித் தூதுவர்கள் (School Ambassadors) நியமிக்கப்பட உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளித் தூதுவரின் விவரங்களை TNSED Parent App-ல் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.
a) பள்ளி மேம்பாட்டுத் தேவைகள் கண்டறிதல்: பள்ளியின் உள்கட்டமைப்பு கல்வி மற்றும் பிற மேம்பாட்டுத் தேவைகளை விவாதித்து SMC தீர்மானங்களாக பதிவு செய்தல். NSNOP வழியாக நன்கொடையாளர்கள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களிடமிருந்து ஆதரவு பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்.
b) சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தல்: நன்கொடை வழங்க ஆர்வமுள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள், NGOs மற்றும் தன்னார்வலர்களை NSNOP தளம் வழியாக பங்களிக்கவும் பங்கேற்கவும் ஊக்குவித்தல்.
a) அனைத்து மாணவர்களும் மணற்கேணி செயலியினை தரவிறக்கம் செய்து, பள்ளி நேரத்திற்கு அப்பாலும் கற்றல் மற்றும் தேர்வுத் தயாரிப்பிற்காக தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிசெய்தல்.
b) மணற்கேணி தொடர்பான பதாகைகள் (Posters) வகுப்பறைகள், அறிவிப்புப் பலகைகள், பெற்றோர் கூட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
a) வகுப்பு 1 முதல் 3 வரை புதிய பாடநூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முதல் பருவத்தில் மாணவர்கள் அடைய வேண்டிய முக்கிய கற்றல் விளைவுகள் குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தல்.
b) ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் இடம்பெற்றுள்ள 'நான் கற்றவை' பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பவற்றை மாணவர்கள் செய்துகாட்ட பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்.
2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவுறும் நிலையில், பள்ளியின் முன்னேற்றம் மற்றும் மாணவர் நலனுக்காக சிறப்பான ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் வழங்கிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தல் மற்றும் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுதல்.
2024-2026 காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை விவரங்கள் பெற்றோர் செயலியில் புதுப்பிக்கப்பட்டுள்ளதை (Resolution Status Update) ஆய்வு செய்து உறுதிசெய்தல்.
2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்த விவரங்களைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்து, நடத்தப்படவுள்ள அனைத்துப் பெற்றோர் கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுதல்.
II. பொதுவான வழிகாட்டுதல்கள்:
- பள்ளிக் கல்வித் துறை மூலம் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை நகலினை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கு அளிக்க அறிவுறுத்த வேண்டும்.
- கல்வி அலுவலர்கள் தவிர பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரல்லாத வேறு எந்தவொரு நபரும் பார்வையாளர்களாகக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.
- பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் உறுப்பினர் வருகை மற்றும் தீர்மானங்களின் விவரங்களை, கூட்ட நாளன்று இரவு 9 மணிக்குள் 'TNSED Parent' App-ல் தவறாது பதிவிட வேண்டும்.
- பருவ மழை அல்லது உள்ளூர் நிகழ்வுகள் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டால், அடுத்துவரும் வேலை நாளில் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டத்தினை நடத்திட வேண்டும்.
0 Comments