🎉 ஆம், அனைவருக்கும் மதிப்பெண் உண்டு!
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) உத்தேச விடைக்குறிப்பில் '*' குறியீடு உள்ள வினாக்களுக்கு தேர்வெழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
📄 TRB-யின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) வெளியிடப்பட்டுள்ள உத்தேச விடைக்குறிப்பில் (Tentative Key Answer), சில குறிப்பிட்ட வினாக்களுக்கு விடையின் அருகில் * (நட்சத்திரக் குறியீடு) வழங்கப்பட்டுள்ளது. இக்குறியீடு வழங்கப்பட்டுள்ள வினாக்களில் பிழைகள் அல்லது குழப்பங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதால், அந்த வினாக்களுக்குத் தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மதிப்பெண் (Grace Marks) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments