பிறப்புப் பதிவு - குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் என்பது குழந்தையின் சட்டப்பூர்வ வயது குறித்த ஆதாரம் மற்றும் குடியுரிமைக்கான முக்கிய ஆதாரம் ஆகும். குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றுதான் முழுமை பெற்ற சான்றிதழ் ஆகும்.
குழந்தையைப் பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம் பெற, அரசுப் பணிகளில் சேர மற்றும் கடவுச்சீட்டிற்கு (Passport) விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும்.
🗓️ 12 மாதங்களுக்குள்...
பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சமர்ப்பித்து பெயரினைப் பதிவு செய்யலாம்.
தாமத கட்டணம் இல்லை (இலவசம்)🗓️ 15 வருடங்களுக்குள்...
12 மாதங்களுக்குப் பின், 15 வருடத்திற்குள் உரிய அலுவலரின் அனுமதி பெற்று குழந்தையின் பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.
காலதாமத கட்டணம் ரூ.200இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும், இதுவரை குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு பெயர் பதிவு செய்திட வரும் 26.09.2026 வரை சிறப்பு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
📍 எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
குழந்தையின் பெயரினை இதுவரை பதிவு செய்யாதோர், கீழ்க்கண்ட அலுவலகங்களில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் விண்ணப்பித்து பதிவுசெய்து கொள்ளலாம்:
- பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம்
- வட்டாட்சியர் (Tahsildar) அலுவலகம்
- பேரூராட்சி அலுவலகம்
- அரசு மருத்துவமனைகள்
மிக முக்கியக் குறிப்பு:
பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை ஒருமுறை பதிவு செய்த பின்னர், எக்காரணம் கொண்டும் பெயரினை மாற்றம் செய்ய இயலாது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி 26.09.2026-க்குள் குழந்தையின் பெயரினைப் பிறப்புச் சான்றில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments