TRB உதவிப் பேராசிரியர் தேர்வு 2025: இறுதி விடைக்குறிப்பு மற்றும் முடிவுகள் வெளியீடு!

TRB உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள்: இறுதி விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ வெளியீடு!

தேர்வு குறித்த சுருக்கமான பின்னணி

தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் பணிகளின்கீழ், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிப்பை (அறிவிப்பு எண்: 04/2025) ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 16.10.2025 அன்று வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 27.12.2025 அன்று மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

தேர்வர் புள்ளிவிவரங்கள்

  • மொத்த விண்ணப்பதாரர்கள்: இத்தேர்விற்கு மொத்தம் 47,047 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
  • தேர்வு எழுதியவர்கள்: விண்ணப்பித்தவர்களில் 42,064 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேரில் கலந்து கொண்டு எழுத்துத் தேர்வை எழுதினர்.

விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபனை விவரங்கள் (Answer Key & Objections)

தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக Part A மற்றும் Part B-க்கான உத்தேச விடைக்குறிப்பு (Tentative Answer Key) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 05.01.2026 அன்று வெளியிடப்பட்டது. அத்துடன் விடைக்குறிப்பில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனைத் தெரிவிக்க ஆட்சேபனை டிராக்கர் (Objection Tracker) வசதியும் வழங்கப்பட்டது.

இதன்மூலம், விண்ணப்பதாரர்களிடமிருந்து 05.01.2026 முதல் 13.01.2026 வரை ஆட்சேபனை மனுக்கள் உரிய ஆதாரங்களுடன் பெறப்பட்டன.

இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) வெளியீடு:

மனுதாரர்களால் உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆட்சேபனை மனுக்களும் சம்பந்தப்பட்ட பாட வல்லுநர்களால் (Subject Experts) முழுமையாகப் பரிசீலனை செய்யப்பட்டன. அந்தப் பரிசீலனையின் அடிப்படையில் திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) 25.06.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு: பாட வல்லுநர்களால் வழங்கப்பட்டுள்ள இந்த இறுதி விடைக்குறிப்பே இறுதியானது ஆகும். இது சார்ந்து இனி எந்தவொரு புதிய ஆட்சேபனை கோரிக்கை மனுக்களும் வாரியத்தால் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் வெளியீடு மற்றும் பணி அனுபவ மதிப்பெண்கள் (Marks & Experience Weightage)

மேற்கண்ட இறுதி விடைக் குறிப்பின் அடிப்படையில், வினாத்தாட்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதார்களின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணி அனுபவத்திற்கான மதிப்பெண்கள் எப்போது வழங்கப்படும்?

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி அனுபவத்திற்காக (Weightage for Teaching Experience) மதிப்பெண் கோரும் விண்ணப்பதார்களுக்கு, அந்த மதிப்பெண்கள் இப்போது உடனடியாக வழங்கப்படமாட்டாது. அசல் ஆவணங்கள் மதிப்பீடு குழுவால் (Certificate Verification Committee) முழுமையான அசல் ஆவணங்கள் சரிபார்ப்பிற்குப் பின்னரே பணி அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நெறிமுறைகள் (Certificate Verification Guidelines)

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பின் (Certificate Verification - CV) போது, விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அனைத்து ஆவணங்களையும் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்:

  • அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் (Original Educational Certificates).
  • சரியான முறையில் பெறப்பட்ட பணி அனுபவ சான்றிதழ் (Teaching Experience Certificate).
  • பல்கலைக் கழகங்களால் வழங்கப்பட்ட இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) கல்வித் தகுதிகளுக்கான இணைத்தன்மை அரசாணை (Equivalence G.O.).
  • M.Phil மற்றும் Ph.D ஆகிய ஆராய்ச்சி கல்வித் தகுதிகள் தொடர்பான பொருண்மைச் சான்றுகள் (Relevance Certificates).

நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது:
கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் (Joint Director of Collegiate Education) தலைமையிலான நிபுணர் குழுவினால் விண்ணப்பதாரர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் நேரில் சரிபார்க்கப்படும். இந்த நிபுணர் குழுவினால் பணி அனுபவத்திற்காக இறுதியாக வழங்கப்படும் மதிப்பெண்கள் மட்டுமே முடிவானதாகும்.

அசல் ஆவணங்கள் சரிபார்ப்புப் பணி முடிவடைந்த பின்னர், புதிதாக அளிக்கப்படும் எந்தவொரு ஆவணங்களும் மற்றும் கோரிக்கை மனுக்களும் வாரியத்தால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கான இடம் (Venue) மற்றும் தேதி (Date) குறித்த விவரங்கள் விரைவில் பின்னர் அறிவிக்கப்படும்.

மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்பைப் பதிவிறக்கம் செய்ய

TRB வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி, உங்களின் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பாடவாரியான Final Answer Key ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணையதள இணைப்பைப் பயன்படுத்தவும்.

📥 Check Marks & Final Key

Post a Comment

0 Comments