1. வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் யார்?
2. கூடலூர் கிழார் இயற்றிய நீதி நூல்
3. ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது என்ற அடிகள் உள்ள நூல்
4. நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடலை பாடியவர்
5. ‘‘எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே” - என கூறியவர்.
6. செயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
7. தவறானதைத் தேர்க 1. பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக் காட்டில் பிறந்தவர் 2. திருவிளையாடல் புராணத்திற்கு வெங்கடாசலம் உரை எழுதியுள்ளார். 3. திருவிளையாடல் புராணம் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
8. தகுதி வழக்குத் தொடர்பு இல்லாத சொல்லைக் கண்டறிக.
9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகைத் தொடர்?
10. பின்வருவனவற்றுள், ‘இருபெயரொட்டுப் பண்புத்தொகை’ சொல் எது?
11. “திராவிடம்” என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்
12. செம்மொழிக்கான கோட்பாடுகள் எத்தனை?
13. கால்டுவெல் எழுதிய நூல் எது?
14. பொருளுக்கேற்ற வினைமரபுகளில் சரியானவற்றுள் தவறானதைத் தேர்க 1. சோற்றை உண்டு பழத்தை சாப்பிட்டான் 2. இராமன் பாலைக் குடித்துவிட்டு தயிரை பிசைந்தான் 3. பாரதியார் கவிதை இயற்றினார் 4. மாலா நீர் குடித்துவிட்டு கோலம் இட்டாள்
15. நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக... & இப்பாடல் வரிகளுக்கு உரியவர் தேர்க:
16. சூழ்வினையை நீக்கும் கை என்றும் நிலைக்கும் கை... & என்று பாடியவர்
17. ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைத்திருந்தனர் & அவ்விடத்திற்குரிய பெயரைத் தேர்க:
18. பொருத்துக : பொருத்தமான இடைநிலையைத் தேர்க. (அ) வருவான் - 1. இறந்தகால இடைநிலை (ஆ) காணான் - 2. நிகழ்கால இடைநிலை (இ) பார்த்தான் - 3. எதிர்கால இடைநிலை (ஈ) நடக்கிறான் - 4. எதிர்மறை இடைநிலை
19. “என் பிழைப்புக் கெட்டது” - எவ்வகை ஆகுபெயர் தேர்க
20. பொருத்துக 1. நொச்சித்திணை - அ. வெற்றி பெற்ற மன்னனை புகழ்தல் 2. உழிஞைத்திணை - ஆ. பகைவீரர் இருவரும் வெற்றி நோக்கிக் போகுதல் 3. தும்பைத்திணை - இ. தன் மதிலை காத்தல் 4. வாகைத்திணை - ஈ. வேற்று அரசன் மதிலை கைப்பற்றுதல்
21. யவனர் என்பவர்கள் யார்?
22. சேரதாண்டவம் என்ற நூல் இயற்றியவர்
23. இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
24. அயோத்திதாசர் எழுதிய நூலின் பெயர்
25. தவறானதைத் தேர்க 1. வளவன் பழம் உண்டான் 2. விடியற்காலையில் சேவல் கூவியது 3. குழந்தை பால் பருகியது 4. இது வேப்பந்தழை துவையல் 5. கவிஞர் கவிதை எழுதினார்
26. விருத்தம் பாடுவதில் வல்லவர்
27. பொருத்துக: அ. வருவான் - 1. இறந்தகால இடைநிலை ஆ. காணான் - 2. நிகழ்கால இடைநிலை இ. பார்த்தான் - 3. எதிர்கால இடைநிலை ஈ. நடக்கிறான் - 4. எதிர்மறை இடைநிலை
28. வினைச் சொற்களின் எண்ணிக்கைத் தேர்க:
29. “இது செய்வாயா?” என்று வினவியபோது உடம்பு நொந்தது & எனக் கூறியது எவ்வகை வினா
30. உயிர் எழுத்தும், இடை எழுத்தும் பிறக்கும் இடம்...
0 Comments