இளநிலை
படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு
இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்களை
என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள்,
அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில்
சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, வரும் கல்வியாண்டில் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட்
நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள
விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வெழுத சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
அவற்றை https://cuet.nta.nic.in/ எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம்
செய்துக் கொள்ளலாம். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை
www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில்
அறிந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது
cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம்
பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments