அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் மகேஷ் பேட்டி

      அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் மகேஷ் பேட்டி
 ''அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என, மதுரையில் கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:
   கல்வித்துறை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆரம்ப கல்வியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் 2025ல் இத்துறை சிறப்பான இடத்தில் இருக்கும். தொடக்க கல்விக்கு என தனி நிர்வாகம் ஏற்படுத்தும் திட்டம் தற்போது இல்லை.அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்பவும், இந்தாண்டு ஓய்வு பெறும் ஆசிரியர் காலியிடங்களை சேர்த்தும் விரைவில் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர்.
   பொதுத் தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்தது வருத்தமளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று தான் மாநில கல்விக் கொள்கை பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. மாணவர்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். அரசு பள்ளிகளில் இடியும் நிலையில் இருந்த 10,031 வகுப்பறைகள் இடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டிற்குள் அனைத்தும் இடிக்கப்படும்.

   நிதி ஒதுக்கிய பின் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகியவை தமிழகத்தின் சாதனை திட்டங்கள். 'ரீடிங் மாரத்தான்' போட்டியில் 18.36 லட்சம் குழந்தைகள் பல கோடி வார்த்தைகளை வாசித்துள்ளனர். தன்னார்வலர்கள் வாசித்தனர் என்பது தவறு. மாணவர்களுக்கு நோட்டுகள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

     கல்வி கமிஷனர் நந்தகுமார், கலெக்டர் அனீஷ்சேகர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments