மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு - நிபந்தனை வழங்கி CEO உத்தரவு

  மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு - நிபந்தனை வழங்கி CEO உத்தரவு.

  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது.
Click here to Download
   23.08.2021 அன்றைய தேதியில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு மருத்துவச் சான்றின் பேரில் 270 நாள்கள் விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் விடுப்பு துய்த்து கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்ட நிலையில் மகப்பேறு விடுப்பு முடிந்து நீட்டிப்பு விடுப்பு விண்ணப்பம் கோரிய விண்ணப்பத்தினை செயல்பட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கடிதத்தின்படி தெரிவிக்கப்படுகிறது.

நிபந்தனைகள் :
1. அரசு விதிகளின்படி மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் மகப்பேறு விடுப்பானது மொத்தத்தில் 365 நாள்களுக்கு மிகாது இருத்தலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இந்த விடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும் . உயிருடன் இரண்டு குழந்தைகள் இருந்தால் மூன்றாவது குழந்தைக்கு அனுமதிக்கக் கூடாது.

3. மகப்பேறு விடுப்பு முடிந்து மீளபணியில் சேரும் தேதியில் உரிய மருத்துவ தகுதிச் சான்று பெற்று முன்னிலைப் படுத்தப்படவேண்டும்.

4. விடுப்பு முடிந்து மீளப்பணியில் சேர அனுமதி கோரும் விண்ணப்பங்களை உரிய தேதியில் பரிந்துரை செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட தலைமையாசிரியர் அறிவுறுத்தப்படுகிறார்.

5. மேற்காண் விடுப்பு குறித்த பதிவுகள் சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments