தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – நிதிப்பற்றாக்குறை எதிரொலி

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – நிதிப்பற்றாக்குறை எதிரொலி

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்காத காரணத்தினால், அவர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த காலத்தில் பலர் தங்களது வேலையை இழந்தனர். மேலும் பலர் செய்த வேலைக்கு ஊதியம் கிடைக்காமல் தவித்தனர். தமிழகத்தின் பொருளாதாரத்தை சரி செய்வதற்கு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஓர் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்கான ஊதியம் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

இதற்கு காரணம் அரசு தரப்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததே. மாவட்ட கல்வி அலுவலகர்களால் ஆசிரியர்கள் ஊதியத்திற்கு நிதி வழங்கப்படவில்லை. தற்போது இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தாமதம் இன்றி சம்பளம் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments