தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை

பொது தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், ஆறு நாட்களும் வகுப்பு நடத்தி, பாடங்களை முடிக்குமாறு, தலைமை ஆசிரியர்களை, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா பிரச்னையால், தமிழகத்தில், ஆறு மாதங்கள் தாமதமாக, பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுவும், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே, நேரடியாக வகுப்புகள் நடக்கின்றன. 

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக, மார்ச்சில் நடத்தப்படும் தேர்வு, இந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு, மே மாதம் நடத்தப்படுகிறது.

அதற்கு முன், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.தேர்தல் நடப்பதற்கு, ஒரு வாரம் முன் வரை மட்டுமே, பள்ளிகளில் வகுப்பு எடுக்க முடியும். அதன்பின், தேர்தலுக்காக, பள்ளிகளை தர வேண்டும். அப்போது குறைந்தபட்சம், 10 நாட்கள் வரை, பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாது.

எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, குறைந்த வேலை நாட்களே உள்ளதால், பாடங்களை விரைந்து முடிக்குமாறு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
'பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்தும் போதே, ஆய்வக பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும். வாரத்தின், ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல், பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆலோசனை தரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments