சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வரும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு

   சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வரும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்படது. 12-ம் வகுப்புக்கு மட்டும் சில தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆரம்ப வகுப்புகளுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டது. 

     இந்நிலையில், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழியில், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக, மே 13-ம் தேதி சிபிஎஸ்இ சார்பில் வெளியான அறிக்கையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் வெளியாகியுள்ள அறிக்கையில், அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments