ஒருவர் மாத ஊதியமாக 50 ஆயிரம் பெற்றால் அகவிலைப்படி பிடித்தம் எவ்வளவு இருக்கும்

   அகவிலைப்படி பிடித்தம் என்பது எப்படி இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி என்பது ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 2020ல் இருந்து 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என்று கணக்கிட்டால் ஒருவர் மாத ஊதியமாக 50 ஆயிரம் பெற்றால்...

ஜனவரி 2020க்கு 4 சதவீதம் 2000
ஜனவரி-ஜூன் வரை 6 மாதம் 
2000X6 = 12000
ஜூலை 2020க்கு கணக்கிட்டால் 
4%+4% = 4000
ஜூலை-டிசம்பர் வரை 6 மாதம் 
4000X6 = 24000
ஜனவரி 2021க்கு கணக்கிட்டால் 4%+4%+4% = 6000
ஜனவரி-ஜூலை வரை 6 மாதம் 
6000X6 = 36000
மொத்தம் 12000+24000+36000 = 72000

   எனவே மேற்கண்ட கணக்குப்படி 50 ஆயிரம் ஊதியம் பெறும் ஒருவர் 72 ஆயிரம் இழக்க வேண்டி வருகிறது. இதுதவிர மற்ற தொகைகளில் ஊதியம் பெறுவோர் மேற்கண்ட முறைப்படி கணக்கீடு செய்து கொண்டால் பல கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 15 நாள் இஎல் மற்றும் 18 மாத அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படுவதால் ஒரு அரசு ஊழியருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சமாக ₹1.50 லட்சம் வருமானம் இழப்பு ஏற்படும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ₹3 லட்சம் வரை இழப்பு ஏற்படும்.

    இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜனவரி 2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஜூலை 2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஜனவரி 2021க்காக அகவிலைப்படி ஆகியவை தற்போது வழங்கப்பட மாட்டாது. மேலும், 2021 ஜனவரி மற்றும் 2021 ஜூலைக்கான அகவிலைப்படி தலா 4 சதவீதம் என 12 சதவீத தொகை 2021 ஜூலையில் வழங்கப்படும். அப்போது, வழங்கப்படும் அகவிலைப்படியில் நிலுவைத்தொகை ஏதும் வழங்கப்பட மாட்டாது. 

    இந்த ஆணை ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர், நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவோர், உள்ளாட்சி பணியாளர்கள், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் ஊதியம் பெறுவோர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், குழந்தை நல ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள், ஆகியோருக்கு பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களின் 15 நாள் ஈட்டிய விடுப்பு மற்றும் 18 மாத அகவிலைப்படியை அரசு பிடித்தம் செய்தால், தமிழக அரசுக்கு 5,000 கோடி வரை மிச்சமாகும்” என்றார்.

Post a Comment

0 Comments