SCERT / DIET சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) -டிசம்பர் 2026 நேரடிப் பயிற்சி வகுப்பிற்கான சிறப்பு அறிவிப்பு!

SCERT DIET Special TET December 2026 Offline Training Registration Form Announcement
Special TET 2026 Training Update

SCERT / DIET சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) - டிசம்பர் 2026 நேரடிப் பயிற்சி வகுப்பிற்கான சிறப்பு அறிவிப்பு!

Special TET 2026 Offline Course Registration Form | டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான (TET) தாள் 1 மற்றும் தாள் 2 நேரடிப் பயிற்சி வகுப்புகள்

அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு, வணக்கம்!
SCERT / DIET சார்பில், டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான (TET) தாள் 1 (Paper 1) மற்றும் தாள் 2 (Paper 2) பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்போது நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளிலிருந்து மாறுபட்டு, இம்முறை பயிற்சி வகுப்புகள் உங்கள் மாவட்டத்திலேயே, வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) நடத்தப்படும்.

🏛️ பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்கள் & பேராசிரியர்கள்:

இடம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகம்.
வழங்குபவர்கள்: அனைத்து வகுப்புகளும் DIET விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் கல்விப் புலத்துடன் தொடர்புடைய பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும்.

📥 பதிவு மற்றும் குழு இணைப்புகள் (Registration & Updates):

📌 ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:

📋

பதிவு செய்தல் (Registration)

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐப் பூர்த்தி செய்து தங்களது பதிவை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

📅

கால அட்டவணை விவரங்கள்

பயிற்சி வகுப்புகளுக்கான கால அட்டவணை மற்றும் இதர முக்கிய விவரங்கள் மேலே உள்ள Telegram குழுவின் வாயிலாகத் தொடர்ச்சியாகப் பகிரப்படும்.

📱 Download Tamilaruvi App for TET & SCERT Training Updates

Post a Comment

0 Comments