தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே எப்போதும் பெரும் கொண்டாட்டம் தான். அரசு பொது விடுமுறைகளைத் தவிர்த்து, கோவில் திருவிழாக்கள், தர்கா கந்தூரி மற்றும் தலைவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறைகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 22-ம் தேதி வியாழக்கிழமை இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🏛️ அக்டோபர் 22 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
1. திருவாரூர் மாவட்டம்: முத்துப்பேட்டை ஷெய்கு தாவூத் ஆண்டவர் தர்கா கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு அக்டோபர் 22-ம் தேதி வியாழக்கிழமை விடுமுறை.
2. தஞ்சாவூர் மாவட்டம்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 22-ம் தேதி வியாழக்கிழமை விடுமுறை.
📌 விடுமுறை நாள்களை ஈடுகட்டும் பணி நாள்கள் (Working Days):
திருவாரூர் மாவட்ட ஈடுகட்டும் நாள்
அக்டோபர் 22 விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 24-ம் தேதி சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் முழு நேரம் செயல்படும்.
தஞ்சாவூர் மாவட்ட ஈடுகட்டும் நாள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் நவம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments