மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்க்க அரசு பள்ளிகளில் புதுப்பொலிவுடன் விநாடி-வினா மன்றம்

Government Schools Quiz Club Sol Vel Tamil Nadu School Education Department EMIS
School Education Update 2026

மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்க்க அரசு பள்ளிகளில் புதுப்பொலிவுடன் 'சொல்! வெல்!' விநாடி-வினா மன்றம்!

அரசுப் பள்ளிகளில் விநாடி-வினா மன்றத்தை 'சொல்! வெல்!' என்ற புதிய அடையாளத்துடன் வலுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் விநாடி-வினா மன்றம் ‘சொல்! வெல்!’ என்ற புதிய அடையாளத்துடன் வலுப்படுத்தப்பட்டு புதிய உற்சாகத்துடன் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவை விரிவுபடுத்துவது, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, தகவல்களைத் தொடர்படுத்தி சிந்திக்கும் திறனை உருவாக்குவது ஆகியவையே இம்மன்றத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதற்கான விரிவான வழிகாட்டுதல்களைப் பள்ளிக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

🎯 மன்றத்தின் முக்கிய நோக்கங்கள் & இலக்குகள்

சில மாணவர்களுக்காக மட்டும் இல்லாமல், 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரும் கேள்வி கேட்டு, கற்று, சிந்தித்து முன்னேறும் வகையில் மன்றத்தின் செயல்பாடுகள் அமைய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் மற்றும் பயிற்சி வாய்ப்பை உறுதி செய்யத் தரப்படுத்தப்பட்ட கற்றல் வளங்கள் எமிஸ் (EMIS) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

📌 சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

💻

எமிஸ் (EMIS) தளத்தில் கற்றல் வளங்கள்

ஒவ்வொரு வகுப்புக்கான விநாடி-வினா மன்றப் பொறுப்பாசிரியர் எமிஸ் தளம் மூலம் வளங்களைப் பதிவிறக்கம் செய்து பாடவேளையின்போது செயல்படுத்த வேண்டும். பல்வேறு கேள்வி வடிவங்கள் மற்றும் சுற்றுகளை மாணவர்கள் பள்ளி நிலையிலேயே அறிந்து கொள்ள இது உதவும்.

🏆

போட்டிகளை எதிர்கொள்ளும் பயிற்சி

மாநில அளவிலான விநாடி-வினா போட்டிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் கேள்வி வடிவங்கள் மற்றும் சுற்றுகள் அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இல்லாமல், முன்பே பயிற்சி பெற்ற ஒன்றாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

💡

சிந்தனைச் சமூகத்தை உருவாக்குதல்

'சொல்! வெல்!' விநாடி-வினா மன்றம், போட்டிக்கான பயிற்சி மையமாக மட்டுமின்றி, கேள்வி கேட்கும் மற்றும் சிந்திக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்கும் சிறந்த கற்றல் தளமாகச் செயல்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

📱 Download Tamilaruvi App for School Education & EMIS Updates

Post a Comment

0 Comments