பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள்

Perunthalaivar Kamarajar Breakfast Scheme Expansion Guidelines 2026
Breakfast Scheme Guidelines 2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள்!

செப்டம்பர் 17, 2026 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், எதிர்வரும் 17.09.2026 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் முறையாகவும் தடையின்றியும் செயல்படுத்தப்படுவதற்காக விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

📌 திட்டத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் & சிறப்பம்சங்கள்:

🏛️ முதன்மைக் குழு அமைப்பு

கிராம ஊராட்சி / பேரூராட்சி அளவில் ஊராட்சி பிரதிநிதி, பள்ளித் தலைமையாசிரியர், SMC தலைவர் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய முதன்மைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

👩‍🍳 SHG உறுப்பினர்கள் தேர்வு

உணவு தயாரிப்பில் திறனும், 10ஆம் வகுப்பு (மலைப்பகுதியில் 8ஆம் வகுப்பு) கல்வித் தகுதியும், முறையான கடன்திருப்பச் செலுத்தும் திறன் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

⏱️ சமையல் & வழங்கும் நேரம்

காலை 6.00 மணிக்குத் தொடங்கி 8.00 மணிக்குள் சமையல் முடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு காலை 8.00 - 9.00 மணிக்குள் சூடாக உணவு வழங்கப்பட வேண்டும்.

🛒 பொருட்கள் கொள்முதல்

அரிசி, உப்பு, எண்ணெய், பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

🔍 மூன்று அடுக்கு கண்காணிப்பு & முக்கியப் பொறுப்புகள்:

கண்காணிப்பு அமைப்பு: மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலான குழு, வட்டார அளவில் BDO/Executive Officer குழு மற்றும் ஊராட்சி அளவில் முதன்மைக் குழு என மூன்று அடுக்கு கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்படும். மாவட்ட அலுவலர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

சிறிய பள்ளிகள்: 10 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் தனி சமையலறை தேவையில்லை; அருகிலுள்ள அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியுடன் இணைத்து Hot Box மூலம் உணவு வழங்கப்பட வேண்டும்.

📱 Download Tamilaruvi App for Government & School Updates

Post a Comment

0 Comments