கடந்த 2017-23 காலகட்டத்தில் 31,510 எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்குக் காலதாமதமாகக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என இந்திய தணிக்கை தலைவரின் (CAG) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த தணிக்கை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
📌 அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
⏳ காலதாமத உதவித்தொகை
2017-23 காலத்தில் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் 36,510 மாணவர்களுக்கு ரூ.7.28 கோடி கல்வி உதவித்தொகை 1 மாதம் முதல் 1 ஆண்டு வரை தாமதமாக வழங்கப்பட்டுள்ளது.
❌ திருப்பி அனுப்பப்பட்ட தொகை
வங்கி கணக்கு முடக்கம், பரிவர்த்தனை நிறுத்தம் போன்ற காரணங்களால் 3,530 பேருக்கு ரூ.161 கோடி உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
⚠️ தவறான பங்களிப்பு
2023-25 ஆண்டுகளில் தகுதியில்லாத எஸ்சி மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர் 2,576 பேருக்கு மத்திய அரசின் பங்கான 60% தொகையில் ரூ.3.64 கோடி தவறாக செலுத்தப்பட்டுள்ளது.
📊 பலவீனமான நிதி கட்டமைப்பு
பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருந்தாலும், மாநிலத்தின் நிதிநிலை அழுத்தத்தில் இருப்பதும், அடிப்படை நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
📋 தணிக்கைக் குழுவின் முக்கியப் பரிந்துரைகள்:
உதவித்தொகை அனுமதிக்கும் முன் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்குவதை உறுதி செய்து, அந்தந்த கல்வி ஆண்டிலேயே தொகை வழங்கப்பட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் 12 நகரங்களைச் சீர்மிகு நகரங்களாக மேம்படுத்த திட்டமிட்ட நிலையில், முன்மொழிவு குளறுப்பியால் திண்டுக்கல் நிராகரிக்கப்பட்டு 11 நகரங்கள் மட்டுமே தேர்வாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments