ஆசிரியர்களுக்கு TET தேர்வுக்கு பதிலாக Refresher Training
Course - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்!
உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுக்கு
பதிலாக Refresher Training Courseபணியிடைப்பயிற்சி வழங்கிட 8 வாரங்களுக்குள்
தமிழக அரசு முடிவெடுக்க மாண்பமை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்!
Court Order -
Download here
அன்பார்ந்த அரசு/அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான
வணக்கங்கள் 🙏🙏🙏
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியில் இருக்கின்ற மூத்த ஆசிரியர்களுக்கு
நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு(STET) இல் நமது JACPOTT &TATPF
ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் தொடுத்த 2 முக்கிய வழக்குகளின் விபரம்
வழக்கு WP(MD) No. 20868/2026 இல் S. BALAMURUGAN Vs STATE OF TAMILNADU இல்
உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு TET PAPER-1
பொருந்தாது என்றும்,TET PAPER-2 இல் எந்த பாடத்தை தேர்வு செய்வது என்ற குழப்பமும்
இருப்பதால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இணையான பணியிடைப்பயிற்சி(REFRESHER COURSE)
நடத்தி சான்று வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் 8 வாரங்களுக்குள்
தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என மாண்பமை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த மாண்பமை உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவு,உயர்நிலை/மேனிலைப்பள்ளி இடைநிலை
ஆசிரியர்களுக்கும்,அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் TET
தேர்வுக்கு பதிலாக பணியிடைப்பயிற்சி வழங்கி மூத்த ஆசிரியர்களின் பணி&பதவி
உயர்வுகளை பாதுகாத்துக்கொள்ள ஒரு நல்வாய்ப்பு ஆகும்.
வழக்கு WP (MD) No. 20869/2026 A. SUBRAMANIAN&ORS Vs STATE OF TAMILNADU இல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பாடத்தில் மட்டும் தேர்வு, மொழிப்பாட
ஆசிரியர்களுக்கு சார்ந்த மொழிப்பாடங்களில் மட்டும் தேர்வு, பணியில் உள்ள அனைத்து
மூத்த ஆசிரியர்களுக்கும் சம மதிப்பெண் தளர்வு, 9&10 வகுப்புகளுக்கு TET
தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது
இந்த வழக்கில் அடுத்து நடைபெற இருக்கும் STET இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
கற்பிக்கும் பாடங்களில் பாடத்திட்டம்/தேர்வு நடத்த தமிழக அரசு
பரிசீலிக்கும் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வார்கள் என்ற தகவல்
கிடைத்துள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் சம மதிப்பெண் தளர்வு,
9&10 கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET விலக்கு குறித்து இன்னும்
அதிகாரிகள் தரப்பில்
முடிவுகள் எடுக்கப்படவில்லைவழங்கப்பட்ட மனு ,நீதிமன்ற தீர்ப்புகள் மீது அரசு
முடிவு எடுக்க வேண்டும். அரசு முடிவு எடுக்குமா?
அரசு முடிவு எடுத்தால்தான் consider தீர்ப்புகள் பயன் தரும்_*
0 Comments