அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் தங்களது பள்ளிக்கான முகப்புத் தோற்றம், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை UDISE+ GIS மொபைல் செயலி வழியாகப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UDISE+ போர்ட்டலில் பள்ளியின் புகைப்படங்கள் (School Images) மற்றும் ஜிபிஎஸ் இருப்பிடத்தை (GPS Location Accuracy) சரியான முறையில் பதிவேற்றம் செய்வது எப்படி? எந்தெந்தப் புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்பதற்கான முழுமையான விளக்கங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
⚠️ புகைப்படங்கள் எடுப்பதற்கான 6 முக்கிய விதிமுறைகள்:
கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியவை:
- எடிட் செய்யப்பட்ட (Edited), செயற்கையான அல்லது மங்கலான (Blur) புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யக்கூடாது. தத்ரூபமாக இருக்க வேண்டும்.
- நல்ல பகல் வெளிச்சத்தில், புகைப்படங்கள் நேராக (சாய்வாக இல்லாமல்) தெளிவாக எடுக்கப்பட வேண்டும்.
- மனிதர்கள், வாகனங்கள் மற்றும் பிற தடைகள் பள்ளியின் தோற்றத்தை மறைக்கக் கூடாது (No Obstacles).
- துல்லியமான இருப்பிடத்தைப் பெற, மொபைலில் GPS High Accuracy ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- ஒவ்வொரு புகைப்படமும் குறிப்பிட்ட 10 மீட்டர் இடைவெளியில் நின்று எடுக்கப்பட வேண்டும்.
- நீங்கள் பதிவேற்றிய படங்கள் (Pending), மாநில அமைப்பின் (State Level) ஒப்புதலுக்குப் பின்னரே வெற்றிகரமாக (Success) ஏற்றுக்கொள்ளப்படும்.
📸 பதிவேற்றம் செய்ய வேண்டிய 4 புகைப்படங்கள்:
படம் 1: Main Gate
பள்ளியின் பெயர் தெளிவாகத் தெரியும்படி, முதன்மை நுழைவாயிலில் (Main Gate) இருந்து 10 மீட்டர் தொலைவில் நின்று எடுக்க வேண்டும்.
படம் 2: Front View
பள்ளியின் பெயர் தெளிவாகத் தெரியும்படி, முதன்மைப் பள்ளிக் கட்டிடத்தின் முன்பக்கத் தோற்றத்தை (Front View) படம்பிடிக்க வேண்டும்.
படம் 3: Other Buildings / HM Room
பள்ளியின் பிற கட்டிடங்கள் (வேறு கோணத்தில்) அல்லது ஒரே கட்டிடம் மட்டும் இருந்தால் தலைமையாசிரியர் அறையை (HM Room) எடுக்க வேண்டும்.
படம் 4: Classrooms / Playground
பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள் (Classrooms) அல்லது விளையாட்டு மைதானம் (Playground) தெளிவாகத் தெரியும் படி எடுக்க வேண்டும்.
▶️ முழுமையான செய்முறை விளக்கம் (Video):
Link: https://youtu.be/ursh7xWM5Tc
0 Comments