🏛️ நீதிமன்ற வழக்கு விவரங்கள்:
நீதிமன்றம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை (High Court Madurai Bench)
நீதியரசர்: மாண்புமிகு நீதியரசர் மும்மினேனி சுதீர்குமார்
தேதி & நேரம்: 03-08-2026 (திங்கள்கிழமை), நண்பகல் 12:10 மணி
மனுதாரர்கள்: மதுரை மாவட்ட இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் (திரு. S பாலமுருகன், திரு. ஆ சுப்பிரமணியன், திரு. க இராஜேஸ்வரன், திரு. க மணிமுத்து).
⚖️ நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
TRB தரப்பு வாதம்:
அரசு தரப்பு சார்பில் ஆஜரான TRB வழக்கறிஞர் திரு அம்ஜத்கான் அவர்கள் வாதிடுகையில், "NCTE மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படியே ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடத்தப்படுகிறது. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கடந்த முறை சொன்னதையே மீண்டும் வாசித்தார்.
ஆசிரியர்கள் தரப்பு வாதம்:
சீனியர் வழக்கறிஞர் திரு பன்னீர்செல்வம் வாதிடுகையில், "கோரிக்கைகள் மீது கொள்கை முடிவு தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். TRB-ஐ பொறுத்தவரை தேர்வு நடத்துவது மட்டுமே வேலை; இவ்வழக்கில் TRB-க்கு சம்பந்தமில்லை. எனவே, பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என வாதாடினார்.
📜 மாண்புமிகு நீதியரசரின் உத்தரவுகள்:
✅ வழக்கு எண்: WP(MD) No. 20868/2026 (இடைநிலை ஆசிரியர்கள்)
ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது நியாயம் இருக்கிறது என்பதை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை 1-5 வகுப்புகளுக்கான தாள்-1 ஐ எழுதக் கட்டாயப்படுத்துவதும், தாள்-2 இல் எந்தப் பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக இல்லை.
எனவே, TET குழப்பங்களைச் சரிசெய்யவோ அல்லது TET-க்கு நிகரான பணியிடைப் பயிற்சி வழங்குவது குறித்தோ 8 வாரங்களுக்குள் பள்ளிக்கல்வித்துறை செயலர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
⏳ வழக்கு எண்: WP(MD) No. 20869/2026 (பட்டதாரி ஆசிரியர்கள்)
பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் பாடத்தில் தேர்வு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மதிப்பெண் தளர்வு, 9-10 வகுப்புகளுக்கு கற்பிப்பவர்களுக்கு TET விலக்கு சார்ந்த கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் இது தொடர்பான வழக்கு 24-08-2026 அன்று விசாரணைக்கு வரவிருப்பதால், அரசு தரப்பில் அங்கு எடுக்கப்படும் கொள்கை முடிவைப் பொறுத்து இவ்வழக்கை விசாரிக்க, வழக்கு விசாரணை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments