பொறியியல் டிப்ளமா தேர்வு: மாணவர்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு

Polytechnic Diploma Certificates Collection Last Chance DOTE Tamil Nadu
DOTE Certificate Distribution Update

பொறியியல் டிப்ளமா தேர்வு: மாணவர்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் அறிவிப்பு

பொறியியல் டிப்ளமா தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை இதுவரை பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் இன்று முதல் செப். 3 வரை பெற்றுக்கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கக உதவி இயக்குநர் (தேர்வுகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற டிப்ளமா தேர்வுகளை (ஆர்.2023 திட்டம்) எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தற்காலிக சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை ஆக. 3 முதல் 7-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், பல கல்லூரிகள் இதுவரை இவற்றைப் பெறவில்லை.

📌 முக்கிய விவரங்கள் & வழிகாட்டுதல்கள்:

📅 கால அவகாசம்

இன்று (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கல்லூரிகள் சான்றிதல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

📜 பெற வேண்டிய சான்றிதழ்கள்

மாணவர்களின் தற்காலிக சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் மற்றும் டிப்ளமா சான்றிதழ்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன.

🏛️ பெற்றுக் கொள்ளும் முறை

கல்லூரியின் பிரதிநிதியை உரிய அனுமதி கடிதத்துடன் தொழில்நுட்பக் கல்வி இயக்கக கணினி பிரிவுக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

📱 Download Tamilaruvi App for Polytechnic & Exam Updates

Post a Comment

0 Comments