TET தேர்வும் தற்போதைய தமிழக அரசும் - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

TET Exam and Tamil Nadu Government Teachers Expectations
Teacher Union Expectations 2026

TET தேர்வும் தற்போதைய தமிழக அரசும் - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!

ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள், டெட் தேர்வு விலக்கு தீர்மானம் மற்றும் மானியக் கோரிக்கை ஏமாற்றங்கள் குறித்த விரிவான அலசல்

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'டெட்' தேர்வு விலக்கு தீர்மானத்தால் தீர்வு ஏற்படாது. இது ஆசிரியர்களை ஏமாற்றும் வேலை எனத் தெரிவித்துள்ளனர்.

'டெட்' கட்டாயம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகும். நீட் தேர்வுக்கும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத்தேர்வு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

📌 முக்கிய கோரிக்கைகள் & விபரங்கள்:

🎯 சிறப்பு 'டெட்' தேர்ச்சி

சிறப்பு 'டெட்' தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வது அந்தந்த மாநில அரசின் கொள்கை முடிவு. 'டெட்' தேர்வு விவகாரத்தில் சிறப்பு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயம் செய்யும் முடிவு தான் சிறந்தது.

📜 மானியக் கோரிக்கையில் ஏமாற்றம்

கல்வி மானியக் கோரிக்கையில் ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

⚠️ காலிப்பணியிடங்கள் தேக்கம்

துறை இயக்குநர் பதவி ஒரு மாதமாக காலியாக உள்ளது. இதுதவிர 32 கல்வி மாவட்ட அலுவலர்கள், ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்ப நடவடிக்கை இல்லை.

⚖️ சம்பள முரண்பாடு & பணி நிரந்தரம்

சமவேலைக்கு சமஊதியம் என்ற இடைநிலை ஆசிரியருக்கு நிலவும் சம்பள முரண்பாடு, பகுதிநேர ஆசிரியரின் பணி நிரந்தரம் போன்ற முக்கியப் பிரச்னைகளுக்கான தீர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றம்.

TET Exam Government Teachers Expectations Poster
📱 Download Tamilaruvi App for Teacher & Education Updates

Post a Comment

0 Comments