தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்தில் இந்த நிதிப் பங்கீடு அமையும். இதற்கிடையே, மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேருவதற்கு தமிழகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட நிதியை 2024–25-ம் கல்வியாண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடி நிதியானது தமிழகத்துக்கு வழங்கப்படாமல் மத்திய அரசு நிலுவை வைத்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 நிதி நிலுவை & மாநில அரசின் செலவினங்கள்:
💰 நிலுவைத் தொகை
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி ரூ.5,109 கோடி நிலுவையில் உள்ளது.
⚖️ நீதிமன்ற உத்தரவு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின்படி 2024–25 மற்றும் 2025–26-ம் ஆண்டுகளுக்கான ஆர்டிஇ (RTE) திட்ட நிதி ரூ.714 கோடி மட்டும் மத்திய அரசு வழங்கியது.
🏛️ மாநில அரசு பங்களிப்பு
2024–25, 2025–26 கல்வியாண்டுகளில் மாநில அரசு ரூ.2,014 கோடி செலவிட்டுள்ள நிலையில், நடப்பு 2026–27-ம் கல்வியாண்டில் இடைக்கால நிதியாக ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுளது.
0 Comments