பெண் அரசு ஊழியர்களின் 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார் பேரவையில் அறிவிப்பு

Woman Government Employee 3rd Child Maternity Leave 365 Days Minister Sarathkumar Announcement
Legislative Assembly Announcement

பெண் அரசு ஊழியர்களின் 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார் பேரவையில் அறிவிப்பு!

மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசுப் பெண் ஊழியர்கள் தங்களின் 3-வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போதும், அவர்களுக்குத் தலா 365 நாட்கள் (ஓராண்டு) முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

முன்னதாக, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் விடுப்பு வழங்கி வந்த நிலையில், கோரிக்கைகள் மற்றும் விதிகளின் திருத்தங்களைத் தொடர்ந்து தற்போது 3-வது குழந்தைகளுக்கும் முழுமையான மகப்பேறு விடுப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

📌 சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

👶 3-வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு

அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தை பிறக்கும் போது, 365 நாட்கள் (1 ஆண்டு) முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

📱 'வெற்றி பாதை' செயலி

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக ரூ.20 லட்சம் செலவில் புதிய செயலி உருவாக்கப்படும்.

⚙️ காலிப்பணியிடங்கள் செயலி

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் வகையில் தனிச் செயலி ஒன்று உருவாக்கப்படும்.

🏛️ TNPSC கூடுதல் கட்டிடம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதல் இணைப்புச் கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும்.

TN Government Employee Maternity Leave Order Details
📱 Download Tamilaruvi App for Govt Updates

Post a Comment

0 Comments