TET 2025 தாள்-1 மற்றும் தாள்-II தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை வழங்குதல் - Instructions & இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:


TET 2025 உண்மைத் தன்மை சான்றிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு - நெறிமுறைகள்

பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அறிவுறுத்தலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 (TET Paper-I & Paper-II) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையை (Genuineness) சரிபார்ப்பதற்கான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் கடிதத்தின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் TET 2025 (தாள் I மற்றும் தாள் II) சான்றிதழ் உண்மைத் தன்மை கோரும் விவரங்களை, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து முழுமையாகப் பெற வேண்டும்.

⏳ மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:

30.07.2026

📋 கவனிக்க வேண்டிய முக்கியக் குறிப்புகள்:

  • பள்ளிகளில் இருந்தோ அல்லது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ தனித்தனியாக நேரடியாக அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஆசிரியர்களின் உண்மைத்தன்மை சார்ந்த கருத்துருக்களை அவர்கள் தேர்வு எழுதிய மாவட்டங்கள் வாரியாகத் தொகுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
  • வேறு மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கருத்துருக்களை (Proposals) இரு நகல்களில் (Two Copies) அனுப்பி வைத்திடல் வேண்டும்.
  • பெறப்பட்ட கருத்துருக்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/தொடக்கக் கல்வி) கிருஷ்ணகிரி/ஓசூர் அலுவலகத்திற்கு மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.

📂 இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

கீழ்க்காணும் ஆவணங்களை வரிசைப்படி இணைக்க வேண்டும்

சாரந்த தலைமையாசிரியரின் முகப்புக் கடிதம் (Covering Letter)
உண்மைத்தன்மை கோரும் ஆசிரியரின் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித் தேர்வின் உண்மைத்தன்மை கோரும் படிவம்
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி சான்றிதழ் நகல் (TET Pass Certificate Copy)

Post a Comment

0 Comments