பள்ளிக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்: 2026-27 கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு (முழுமையான விவரங்கள்)

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2026-27 கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு: மாநில, மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களுக்கான முழுமையான வழிகாட்டல்கள்!

முன்னிலை: முனைவர் ச. கண்ணப்பன்
ந.க.எண்: 007235/G3/2026 | நாள்: 02.07.2026

திட்டத்தின் பின்னணி மற்றும் நோக்கம்:

மாணவர், மொழிப்பாடங்கள் மற்றும் கணித செயல்பாடுகளில் அடிப்படைத் திறனை உறுதி செய்திடும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை கடந்த ஆண்டுகளில் பல்வேறு சீரிய முன்னெடுப்புகளை வழங்கியது:

  • 2023-2024: இணைப்புப் பயிற்சி (Bridge Course) வழங்கப்பட்டது.
  • 2024-2025: Focus Learners திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • 2025-2026: அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றலில் திறன் அடைவு பெறுவதற்கு முறையான வகுப்புகள் நடத்தப்பட்டன.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் ஆணையின்படி, மாவட்ட நிருவாகக் குழு மற்றும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதல்களுடன் இது சீரிய முறையில் நடத்தப்பட்டு, பெரும்பான்மையான மாணவர்கள் முழு கற்றல் அடைவைப் பெற்றனர்.

தற்போதைய இலக்கு: இந்நிலையில் 2026-2027 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றலோடு அனைத்துக் கற்றல் விளைவுகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இப்புதிய கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மாவட்ட அளவில் செயல்பட உள்ளது. சென்ற ஆண்டு பணியாற்றிய மாநில நிருவாக ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து இக்கல்வியாண்டும் செயல்படும்.

📌 பாட மற்றும் நிருவாக ஒருங்கிணைப்புக் குழுவின் 15 முக்கியப் பணிகள்:

  • 2026-27ஆம் கல்வியாண்டில் இக்குழுவினை அமைக்க, 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 11, 12 வகுப்புகளுக்கான தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் பட்டியலைத் தயாரித்தல்.
  • கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மூலம் திறன் குறைவான மாணவர்களுக்கு முதல் பருவத்திற்குள்ளாகவே அடிப்படை கற்றல் அடைவு பெற வழி செய்தல்.
  • ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார குழுக்கள் மூலம் Whatsapp Group வழியாக அடிப்படை விவரங்களைப் பெறுதல்.
  • அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்களின் பங்கேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வகையிலும் ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தல் மற்றும் கல்வியாண்டு செயல்பாடுகளை மாதவாரியாக திட்டமிடுதல் (இணைப்பு -4).
  • மாணவர்களுக்கு அனைத்துக் கற்றல் விளைவுகளும் சென்றடைய, மாவட்ட குழுவில் உள்ள திறமையான மற்றும் 6 முதல் 12 வகுப்பு வரை பாடத்திட்டத்தில் தொடர்ச்சியை நன்கு அறிந்த ஓர் ஆசிரியரை முதன்மைக் கருத்தாளராகக் கொண்டு, உயர்நிலையில் 5 பாடங்களையும் மேல்நிலையில் 12 பாடங்களையும் வலுவூட்ட ஒருங்கிணைப்புப் பணி மேற்கொள்ளுதல்.
  • முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) / மாவட்ட கல்வி அலுவலர்களது (DEO) பள்ளிப்பார்வையின் போது காணப்பட்ட குறை மற்றும் நிறைகள் மாதந்தோறும் செயல்முறைகளாக (Proceedings) அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டதை உறுதி செய்தல்.
  • CEO பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியரின் நிருவாகப் பணி மற்றும் பாட ஆசிரியரின் கற்பித்தல் பணி சிறப்பாக இருப்பின் அவர்களைப் பாராட்டிப் 'பாராட்டுச் சான்றிதழ்' (இணைப்பு-3) வழங்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் சிறப்பாகச் செயல்பட்ட வட்டாரங்களின் வழிமுறைகளை மாநில நிருவாகக் குழு மூலம் பிற மாவட்டங்களுக்கு வழங்குதல்.
  • மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் போது மாணவர்கள் தானாக நன்முறையில் தேர்வெழுதித் தேர்ச்சி பெற ஊக்கப்படுத்தும் வகையில் இக்குழு முறையான களம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளுதல்.
  • ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, ஒப்பிட்டு அறிக்கையைத் தயாரித்தல்.
  • பெறப்பட்ட தரவுகளைக்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களுடன் மாவட்ட குழுக்களை இணைக்கும் வகையில் இணையவழிக் கூட்டங்களை (Online Meetings) நடத்துதல்.
  • சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியரின் செயல்பாடுகள் சார்ந்த (புகைப்படங்கள், காணொளிகள், நூல்கள், PDF, Audio, Video) போன்றவற்றைத் தொகுத்து அறிக்கைகளாக பெறுதல்.
  • இக்குழுவானது பொதுத்தேர்வின் தேர்ச்சி விழுக்காட்டை மட்டும் இலக்காக கொள்ளாமல், மாணவர்களின் சராசரி மதிப்பெண்களை உயர்த்துவதை இன்றியமையாத நோக்கமாகக்கொண்டு செயல்பட ஊக்குவித்தல்.
  • NAS, PGI, SLAS, ASER உள்ளிட்ட மதிப்பீடுகளில் நம் தமிழ்நாடு மாணவர்களின் மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்து வருவதை உறுதி செய்தல்.
  • NEET, JEE, CUET, CLAT, NMMS, TRUST, NTSE மற்றும் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு போன்ற திறனாய்வு, உதவித்தொகைத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை இக்குழு மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்துதல்.
  • மேற்காண் அனைத்துச் செயல்பாடுகளிலும் மாநில, மாவட்ட, வட்டாரக் குழுக்கள் முன்னின்று ஒருங்கிணைத்திடவும், 2026-27 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகள் முழு இலக்கினை எட்டுவதற்கு மாவட்ட/வட்டார பாட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை (இணைப்பு -2) அவர்தம் பள்ளிலிருந்தே பணிபுரிந்திட இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்திட அறிவுறுத்துதல்.

📊 மாவட்ட அளவிலான பாட மற்றும் நிருவாக குழு உறுப்பினர்கள்

வ.எண் மாவட்ட குழு உறுப்பினர்கள் (ஒரு மாவட்டத்திற்கு)
1 உயர்நிலை அளவில் 5 பாடத்திற்கு - 5 தலைமை ஆசிரியர்கள்
2 6 முதல் 10 வகுப்பு வரை 5 பாடத்திற்கு - 10 ஆசிரியர்கள்
3 மேல்நிலை அளவில் 12 பாடங்களுக்கு - 12 தலைமை ஆசிரியர்கள்
4 மேல்நிலை அளவில் 12 பாடங்களுக்கு - 24 ஆசிரியர்கள்

📈 வட்டார அளவிலான பாட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

வ.எண் வட்டாரக் குழு உறுப்பினர்கள் (ஒரு வட்டாரத்திற்கு)
1 உயர்நிலைப்பள்ளி அளவில் - 1 தலைமை ஆசிரியர் மற்றும் பாடத்திற்கு 2 ஆசிரியர்கள்
2 மேல்நிலைப்பள்ளி அளவில் - 1 தலைமை ஆசிரியர் மற்றும் பாடத்திற்கு 1 ஆசிரியர் (12 பாடங்கள்)

பதிவு செய்வதற்கான இணைப்பு:

இக்குழுவில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் விவரங்களைக் கீழ்க்கண்ட கூகுள் படிவ இணைப்பில் (Google Form Link) பூர்த்தி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

📝 Google Form-ல் பதிவு செய்ய கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments