ஆசிரியர்களுக்கான தினசரி AI கற்றல்
வகுப்பறை கற்பித்தலை எளிமையாக்கும் எளிய தொழில்நுட்ப வழிகாட்டி
நாள் 2: நொடிப்பொழுதில் வினாத்தாள் (Quiz / MCQs) தயாரிப்பது எப்படி?
ஆசிரியர்களே! ஒரு பாடத்தை நடத்தி முடித்த பிறகு, மாணவர்களுக்கு சிறு தேர்வு (Slip Test) வைக்க வினாத்தாள் தயார் செய்வது நமக்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு வேலையாகும். குறிப்பாகப் பல்வாய்ப்பு வினாக்களுக்கு (Multiple Choice Questions) சரியான 4 விருப்பங்களை (Options) யோசித்து எழுதுவது மிகவும் கடினம்.
ஆனால் இன்று, AI-ஐப் பயன்படுத்தி வெறும் 2 நிமிடங்களில் விடைக்குறிப்புகளுடன் (Answer Key) ஒரு முழுமையான வினாத்தாளை எவ்வாறு தமிழில் உருவாக்குவது என்பதைப் பார்க்கப் போகிறோம்.
(குறிப்பு: அடைப்புக்குறிக்குள் [ ] உள்ள இடங்களில் உங்கள் வகுப்பு மற்றும் பாடத்தின் தலைப்பை மட்டும் மாற்றிக்கொள்ளவும்.)
இதனை எவ்வாறு பயன்படுத்துவது? (Step-by-Step Guide)
- வழக்கம்போல உங்களுக்குப் பிடித்த AI செயலியை (ChatGPT அல்லது Gemini) திறக்கவும்.
- மேலே உள்ள 'Copy Text' பட்டனை கிளிக் செய்து, அந்த வாசகத்தை AI செயலியின் Type Box-ல் Paste செய்யவும்.
- உங்கள் வகுப்பு மற்றும் எந்தப் பாடத்திலிருந்து வினாக்கள் வேண்டுமோ அந்தத் தலைப்பை மாற்றிவிட்டு 'Send' கொடுக்கவும். (எ.கா: 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் - இந்திய அரசியலமைப்பு)
- அடுத்த சில நொடிகளில், 10 வினாக்களும் அதற்கான 4 Options-ம், விடைக்குறிப்பும் (Answer Key) மிக நேர்த்தியாகத் தயாராகிவிடும். இதை அப்படியே Copy செய்து Word-ல் Paste செய்து Print எடுத்துக்கொள்ளலாம்!
📱 ஆசிரியர்களுக்கான சிறந்த AI செயலிகள்
இந்த செயலிகளை இலவசமாக உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்:
🤖 ChatGPT
✨ Google Gemini
இன்றே உங்கள் மாணவர்களுக்கான அடுத்த தேர்வின் வினாத்தாளை AI மூலம் தயாரித்து அசத்துங்கள்! நாளை மற்றுமொரு பயனுள்ள AI நுட்பத்துடன் சந்திப்போம்.
0 Comments