ஆசிரியர்களுக்கான தினசரி AI கற்றல்
வகுப்பறை கற்பித்தலை எளிமையாக்கும் எளிய தொழில்நுட்ப வழிகாட்டி
நாள் 1: AI மூலம் 2 நிமிடங்களில் பாடத்திட்டம் (Lesson Plan) உருவாக்குவது எப்படி?
வணக்கம் ஆசிரியர்களே! நாம் ஒரு பாடத்தை வகுப்பறையில் நடத்துவதற்கு முன்பாக, அதற்கான Lesson Plan (பாடத்திட்டம்) தயாரிப்பது இன்றியமையாதது. ஆனால், அதற்கு நமக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இன்று நாம் பார்க்கப்போகும் முதல் AI நுட்பம், உங்களுக்கான ஒரு முழுமையான Lesson Plan-ஐ வெறும் 2 நிமிடங்களில் எவ்வாறு தயாரிப்பது என்பதுதான்!
இதற்கு நாம் தமிழில் மிகச் சிறப்பாகச் செயல்படும் ChatGPT, Google Gemini, அல்லது Microsoft Copilot ஆகிய இலவச AI செயலிகளைப் பயன்படுத்தலாம். AI-யிடம் இருந்து சிறந்த பதிலைச் பெற நாம் கொடுக்கும் கட்டளைக்கு 'Prompt' என்று பெயர்.
(குறிப்பு: அடைப்புக்குறிக்குள் [ ] உள்ள இடங்களில் உங்கள் வகுப்பு மற்றும் பாடத்தின் பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளவும்.)
இதனை எவ்வாறு பயன்படுத்துவது? (Step-by-Step Guide)
- முதலில் உங்களுக்குப் பிடித்த AI செயலியை (App) மொபைலில் திறக்கவும்.
- மேலே உள்ள 'Copy Text' பட்டனை கிளிக் செய்து, அந்த வாசகத்தை AI செயலியின் Type Box-ல் Paste செய்யவும்.
- உங்கள் வகுப்பு மற்றும் பாடத்தின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு 'Send / Enter' கொடுக்கவும்.
- அடுத்த சில நொடிகளில், பாட அறிமுகம் முதல் மதிப்பீட்டு கேள்விகள் வரை மிக நேர்த்தியான ஒரு பாடத்திட்டம் தமிழில் தயாராகிவிடும்!
📱 ஆசிரியர்களுக்கான சிறந்த AI செயலிகள்
இந்த செயலிகளை இலவசமாக உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்:
🤖 ChatGPT
✨ Google Gemini
🚀 MS Copilot
இன்றே இந்த எளிய நுட்பத்தை உங்கள் மொபைலில் செய்து பாருங்கள். உங்கள் கற்பித்தல் பணி இன்னும் எளிதாகும்! நாளை மற்றுமொரு பயனுள்ள AI நுட்பத்துடன் சந்திப்போம்.
0 Comments