பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 பேருக்கு தற்காலிக ஆணை

TNEA Updates 2026

பொறியியல் மாணவர் சேர்க்கை

முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 பேருக்கு தற்காலிக ஆணை!

Tamil Nadu Engineering Admissions TNEA First Round Counseling Allotment 2026

பொறியியல் மாணவர் சேர்க்கையில் (TNEA) பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் 35,214 மாணவர்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தங்களது தற்காலிக ஒதுக்கீட்டை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📊 முதல் சுற்று கலந்தாய்வு விவரங்கள்:

🎓

தற்காலிக ஆணை பெற்றவர்கள்

35,214 மாணவர்கள்

📈

பங்கேற்ற கட்-ஆஃப்

200 முதல் 171 வரை

உறுதி செய்வதற்கான கெடு

இன்று மாலை 5 மணிக்குள்

நடப்புக் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த ஜூலை 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெற்றன. இக்கலந்தாய்வின் மூலம் 950 பேருக்கு இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான முதல்சுற்று ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் 200 முதல் 171 கட்-ஆஃப் (Cut-off) மதிப்பெண் பெற்றவர்கள், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தகுதியுள்ள அனைத்துத் தொழிற்கல்வி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

📢 மாணவர்களின் கவனத்திற்கு!

நேற்று காலை 10 மணி நிலவரப்படி 35,214 மாணவர்களுக்குத் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு உறுதிப்படுத்தும் மாணவர்களுக்கு நாளை (ஞாயிறு) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை (Final Allotment Order) ஆன்லைனில் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments