மாணவர்களை இளம் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே INSPIRE MANAK விருதுத் திட்டமாகும். இத்திட்டம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சமுதாயத்திற்குப் பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
💡 திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
விருதுத் தொகை
ரூ. 10,000/-
தகுதியான வகுப்புகள்
6 முதல் 12-ஆம் வகுப்பு
கடைசித் தேதி
15.09.2026
பரிந்துரைக்கப்படும் திட்டங்கள்
ஒரு பள்ளிக்கு 5 திட்டங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் பத்தாயிரம் (₹10,000) பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்தத் தொகையைக் கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை (Project Models) சிறப்புறத் தயாரித்துப் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
🏫 பள்ளி வாரியான மாணவர் ஒதுக்கீடு:
மேல்நிலைப் பள்ளிகள் (Higher Secondary Schools)
6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 3 மாணவர்கள் + 11 மற்றும் 12-ஆம் வகுப்பு (அறிவியல் பிரிவு) 2 மாணவர்கள் என மொத்தம் 5 மாணவர்கள்.
உயர்நிலைப் பள்ளிகள் (High Schools)
6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்யலாம்.
நடுநிலைப் பள்ளிகள் (Middle Schools)
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்யலாம்.
📊 தேர்வு நடைபெறும் படிநிலைகள்:
முதற்கட்டமாக மாணவர்களின் கருத்துருவை பள்ளி மூலம் இணையதளத்தில் பதிவு செய்தல்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 38 மாவட்டங்களிலும் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பர்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் 10% மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பர் (பதக்கங்கள் வழங்கப்படும்).
மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களில் 10% பேர் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்வார்கள் (செலவுகளை மத்திய அரசு ஏற்கும்).
🌐 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
பள்ளித் தலைமையாசிரியர்கள் அதிகப்படியான மாணவர்களை ஊக்குவித்து கீழ்க்கண்ட இணையதளத்தில் 15.07.2026 முதல் 15.09.2026 வரை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
www.inspireawards-dst.gov.in
0 Comments