பள்ளிக்கல்வித்துறை: பள்ளி மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக் கல்வி - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக் கல்வி - வழிகாட்டு நெறிமுறைகள்

வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக் கல்வி

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாடத்திட்டச் செயலாக்க வழிமுறைகள்.

🌟 திட்டத்தின் நோக்கம் மற்றும் அறிமுகம்

பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் உயரிய நோக்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை முன்னெடுத்துள்ளது.

இதற்காக 1 முதல் 12ஆம் வகுப்பிற்கான "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

📖 பாடவேளை மற்றும் ஆசிரியர் பொறுப்புகள்

இப்புத்தகங்களை மாணவர்களிடம் திறம்படக் கொண்டு சேர்க்க கீழ்க்காணும் நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்:

  • பள்ளிக்கல்வி நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள நன்னெறிக் கல்வி பாடவேளையினை முழுமையாகப் பயன்படுத்தி, இப்புத்தகங்களில் உள்ள கருத்துக்களை நடப்பு நிகழ்வுகளுடன் இணைத்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
  • முக்கியமாக, 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடவேளைகளில் வேறு பிற பாடங்களை நடத்துதல் கூடாது.
  • நன்னெறிக் கல்வியினை விருப்பமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இப்புத்தகத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்திட தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

🏆 மன்றச் செயல்பாடுகள் மற்றும் போட்டிகள்

பள்ளிகளில் செயல்படும் பல்வேறு மன்றங்கள் வாயிலாக மாணவர்களுக்கு வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைக்க வேண்டும்.

இலக்கிய மன்றம்: "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தினைப் பயன்படுத்தி கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போன்ற பள்ளி அளவிலான போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மன்ற வாரியாக விழிப்புணர்வுத் தலைப்புகள்:

பள்ளிகளில் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், இப்புத்தகத்தில் உள்ள கீழ்க்காணும் பாடங்களைக் கற்றுத்தர வேண்டும்.

🚫

போதை எதிர்ப்பு மன்றம்

  • வேண்டவே வேண்டாம்
  • பாதை மாறிய பேதை
🚦

சாலை பாதுகாப்பு மன்றம்

  • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு
  • விதிகளை மதித்தல்
💻

இணையப் பாதுகாப்பு

  • நிதானமே விவேகம்
  • விழிப்புணர்வு வென்றது
  • இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
  • விழித்திரு
🛡️

குழந்தை பாதுகாப்பு

  • குழந்தை பாதுகாப்பு
  • உண்மையின் உரைகல்
  • விழிப்புடன் இரு விபரிதத்தைத் தடு
  • பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல்
🌱

சுற்றுச்சூழல் மன்றம்

  • இயற்கை வளமே நமது ஆற்றல் வளம்
  • சூழல் காப்போம்

🧠 மனநல மேம்பாடு மற்றும் நல்லொழுக்கச் சிந்தனைகள்

மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை நீக்கி அவர்களை வாழ்வில் மேன்மையடையச் செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் முதன்மையான பணியாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

மனநல மேம்பாட்டிற்கான பாடங்கள்

  • மனவெழுச்சிகளைக் கையாளுதல்
  • மனத்தடை உடை! வெற்றியை அடை

நல்லொழுக்கச் சிந்தனைகள்

  • நல்வழி நட
  • காலம் தவறாமை
  • தெளிவான சிந்தனை வித்திடும் சாதனை

செயலாக்கம்

மேற்காண் தலைப்புகள் மட்டுமல்லாமல், பள்ளியின் கல்விசார் மற்றும் கல்விசாரா செயல்பாடுகளில் இப்புத்தகத்தைப் பயன்படுத்தி பிற நன்னெறிக் கருத்துகளையும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தினை மாவட்ட அளவில் திறம்படச் செயல்படுத்தத் திட்டங்களை வகுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள், முதல்வர்களுக்கு உரிய சுற்றறிக்கையினை அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments