44,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

44,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

தமிழக அரசு பள்ளிகளில், 4.3 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு புதிதாக சேர்ந்தனர். இந்தாண்டு, ஐந்து லட்சம் மாணவர்களை சேர்க்க, தொடக்கக்கல்வி துறையின் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

அதை நிறைவேற்றும் வகையில், வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் துவங்கும் மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் மார்ச் 2ம் தேதியே துவக்கினர்.

இதையடுத்து, 5 வயது பூர்த்தியான குழந்தைகள் பற்றிய விபரங்களை, அங்கன்வாடிகளில் சேகரித்துள்ள ஆசிரியர்கள், அவர்களை வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 20 நாட்களில், 44,396 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

Post a Comment

0 Comments