TRB உதவிப் பேராசிரியர் நியமனம் -சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெறும் நாள் அறிவிப்பு
TRB உதவிப் பேராசிரியர் நியமனம் - 5 பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெறும் நாள் அறிவிப்பு - தொடர்ந்து மற்ற பாடங்களுக்கும் அறிவிப்பு வரும் - TRB
செய்தி வெளியீடு
2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல்
கல்லூரிகளில் காலியாக உள்ள 48 பாடத்திற்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு
நியமனம் செய்வதற்கான அறிவிக்கை (Notification) எண். 04/2025ன்படி ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் 16.10.2025 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 27.122025 அன்று
காலை (ஒளிக்குறி மதிப்பெண் உணரி) OMR Based வழியாக தேர்வுகளும், மாலை விளக்கமான
(Descriptive type) விடைத் தேர்வுகளும் நடத்தப்பட்டது.
மேற்படி நியமனத் தேர்வுக்கு மொத்தம் 47,047 பணிநாடுநர்கள் விண்ணப்பித்தனர். அதில்
42,064 பேர் எழுத்துத் தேர்வு எழுதினர். மேற்படி தேர்வுகளின் பகுதி A & B
க்கான தற்காலிக விடைக்குறிப்பு (Tentative Answers Key) அதனைத் தொடர்ந்து
அவ்விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனைகளுக்கான விசைச் செயலி (Objection Tracker)
மூலம் 05.01.2026 அன்று முதல் 13.01.2026 வரை தொடர்புடைய அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்
மற்றும் பிரதிநிதித்துவங்களுடன் ஆட்சேபனைக்கான ஆசிரியர் தேர்வு வாரிய வளைதளத்தில்
உள்ள விசைச் செயலி (Objection Tracker) மூலம் தெரிவிக்குமாறு
அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் பெறப்பட்ட அனைத்து
ஆட்சேபனைகளையும் பாட நிபுணர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இறுதி
விடைக்குறிப்பு 25.02.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய வளைதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
CLICK HERE FOR FINAL ANSWER KEY - MASTER QUESTION PAPER - Click here to Download
CLICK HERE TO VIEW EXAMINATION RESULTS - Click here to Download
CLICK HERE TO VIEW LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
& INTERVIEW - Click here to Download
0 Comments