ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்வித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய வழக்குகள் இன்று (30.09.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
📌 இன்றைய முக்கிய வழக்கு விவரங்கள்:
1. பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு
பணியிட மாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை தொடர்பான வழக்கு, இன்று (30.09.2026) 47-வது வழக்காக, நீதிமன்ற எண் 12-ல், மாண்புமிகு நீதியரசர் மும்முனி சுதிர்க்குமார் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
2. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET வழக்குகள்
Grace Mark, OC Mark மற்றும் Equal Mark தொடர்பான வழக்குகள் இன்று 72-வது வழக்காக நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
3. TET தேர்வு முடிவு வெளியீடு தொடர்பான வழக்கு
தமிழ்நாடு அரசு நடத்திய TET தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரும் வழக்கும் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
0 Comments