LIVE
பிரேக்கிங் நியூஸ்
தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு பிப்ரவரி 21 சனிக்கிழமை முழு வேலை நாள் அறிவிப்பு!
தென்காசி:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, கடந்த 16.10.2025 அன்று பெய்த கனமழையின் காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகின்ற 21.02.2026 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் (அரசு மற்றும் தனியார்) முழு வேலை நாளாக இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments