யுஜிசி ‘நெட்’ தேர்வு தேதி அறிவிப்பு
யுஜிசி நெட் தேர்வு, டிச.31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை கணினிவழியில்
நடைபெறுகிறது.
உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு ஆண்டுக்கு 2
தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தப்படுகிறது.இத்தேர்வை யுஜிசி சார்பில்
தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
அதன்படி, நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு மைய விவரம் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்படும் என்று
என்டிஏ இயக்குநர் (தேர்வுகள்) பி.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

0 Comments