கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வுக்காக வருகை தந்தார். பள்ளிக்கு வந்த ஆட்சியரை மாணவ, மாணவிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
📌 ஆய்வின் முக்கிய அம்சங்கள்:
🍲 சத்துணவு ஆய்வு
பள்ளியின் சமையலறைக்குச் சென்று மாணவர்களுக்குத் தயாரிக்கப்பட்டிருந்த உணவு மற்றும் சாம்பாரைப் பார்வையிட்டு, சமைத்த சாப்பாட்டை வாங்கிச் சுவைத்துப் பார்த்து உணவு விவரங்களைக் கேட்டறிந்தார்.
📚 வகுப்புப் பணி & வாய்ப்பாடு
வகுப்பறைக்குச் சென்ற ஆட்சியர் மாணவிகளை அழைத்து வாய்ப்பாடு சொல்லக் கூறினார். மாணவிகளும் ஆட்சியரிடம் வாய்ப்பாடுகளை நன்றாக ஒப்பித்தனர்.
🎯 மாணவர்களுடன் உரையாடல்
மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால லட்சியம் குறித்துக் கேட்டறிந்து, மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
👨🏫 சமூக அறிவியல் பாடம்
மாணவர்களுக்குச் சமூக அறிவியல் பாடம் எடுத்த ஆட்சியர், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வு முறை வழியில் (Activity-based) பாடங்களைச் சொல்லித் தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
0 Comments