RTE Admission - தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்
சேர்க்கை அறிவிப்பு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilT6qxgCnene28352sQ431sNAHq-B1FFGL55VSWZUxBKYUVKjZ90oViXjiffh1O80XSGynpAtrB2K8aFa3lzAkjaFpa37w07miB6-tvmyIVfIWBZG40AAKwgqUTyA8rrL4QHptKlIJoTivBvNN5VYRlO-p3cuLF-Sg583ig55gKw0HlGl8s0fmrQkI5ls/s320/82665781-vector-illustration-of-happy-school-children-in-front-of-school-building.jpg)
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 12 (
1 ) ( c ) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில்
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை
வகுப்பில் ( LKG / Std ) குறைந்த பட்சம் 25 % இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான
வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன . அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல்
2023-2024 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு
பயனடைந்துள்ளனர்.
சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக , வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில் , வெளிப்படைத்
தன்மையை உறுதி செய்யும் பொருட்டு . பார்வை ( 5 ) இல் கண்ட அரசாணையில் கூடுதல்
வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி RTE Act 2009 பிரிவு 12 ( 1 ) ( சி ) யின் 25 % இடஒதுக்கீடு
அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள
வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி
தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RTE Admission Circular 2024 - TN Private Schools Director -
Download here
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrUaSvjMHGFoa6IpsE6fICZ_B9NmjwzoGcwfHcOGN7ZP1dXQhqK9_uj0R-br7tAQ06uWRtIwLQaBxBSf8ihGcCV-Zq86wi9NanwjYeSt6tYdf5IttIKaL_vDCdV3n81kK0PpoByY4d-s27c7GmIV4J-hCRnAvJiReA9f3WIfojqo5E4yrTbZ3NDaSJj0rG/w640-h290/IMG_20240402_113134.jpg)
0 Comments