10th Tamil TNPSC Important Study Notes அகத்திணைகள் ஏழு, பெரும் பொழுது, சிறுபொழுது

10 ஆம் வகுப்பு தமிழ்
முதற்பொருள்

அகத்திணைகள் ஏழு.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - சுரமும் /மணலும் மணல் சார்ந்த இடமும்.

பெரும் பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக்காலம் - மார்கழி, தை
பின் பனிக்காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முதுவேனில் காலம் - ஆனி, ஆடி

சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)

காலை - 6 - 10 மணிவரை
நண்பகல் - 10 - 2 மணிவரை
எற்பாடு - 2- 6 மணிவரை
மாலை - 6 - 10 மணிவரை
யாமம் - இரவு 10 - 2 மணிவரை
வைகறை - 2 - காலை 6 மணி வரை.

எற்பாடு = எல் + பாடு. (எல் - ஞாயிறு. பாடு - மறையும் நேரம்)
சூரியன் அஸ்தமிக்கும் நேரம்

திணைகளின் பெரும் பொழுது மற்றும் சிறுபொழுது.

குறிஞ்சி - குளிர்காலம், முன் பனிக்காலம் / யாமம்.
முல்லை - கார்காலம் /மாலை
மருதம் - ஆறு பெரும் பொழுதுகள்/வைகறை
நெய்தல் - ஆறு பெரும் பொழுதுகள்/ எற்பாடு
பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலங்கள் / நண்பகல்.

கருப்பொருள்

திணைகளுக்குரிய, தெய்வம்,மக்கள்,பூ, ஊர், பறை

குறிஞ்சி - முருகன்(சேயோன்), வெற்பன் குறவர் குறத்தியர்,செங்காந்தள், சிறுகுடி, தொண்டகம்

முல்லை - திருமால் (மாயோன்), தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்,தோன்றி, பாடி சேரி, ஏறுகோட்பறை

மருதம் - இந்திரன், ஊரன் உழவர் உழத்தியர், செங்கழுநீர், பேரூர் மூதூர், மணமுழா நெல்லரிகிளை

நெய்தல் - வருணன், சேர்ப்பன் பரதன் பரத்தியர் , தாழை நெய்தல், பட்டிணம் பாக்கம், மீன்கோட் பறை

பாலை - கொற்றவை, எயினர் எயிற்றியர், குரவம் பாதிரி,குறும்பு,துடிப்பறை




Post a Comment

0 Comments