Union Budget 2023 - முக்கிய அம்சங்கள்

Union Budget 2023 - முக்கிய அம்சங்கள்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 5வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.

மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.. Live Updates

12:27 Feb 1
ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது

புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு.
12:19 Feb 1
தங்கம், வெள்ளி, வைரம் விலை உயரும்

இறால் உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும்.
6.5 கோடி பேர் வருமான வரி செலுத்தியிருக்கிறார்கள்.

தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:14 Feb 1
சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி உயர்வு.

சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிப்பு

12:13 Feb 1
லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும்.

ரசாயன பொருள்களுக்கான வரி குறையும்.
சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி உயர்வு

12:11 Feb 1
வரும் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்

12:09 Feb 1
பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்

7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாக உயர்வு.

12:07 Feb 1
உயிரி ஆராய்ச்சி மையங்கள்

புதிதாக 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
சிறு, குறு, நுடுத்தர தொழில்களுக்கு கடன் தர 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள அரசு உதவி.

50 சுற்றுலா தளங்கள் தேர்வு செய்யப்பட்டு முழு சுற்றுலா பேக்கேஜ் ஆக அறிமுகப்படுத்தப்படும்.

சிறு, குறு கடன்களுக்கான வட்டியை 1 சதவிகிதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

12:00 Feb 1
சிறப்பு வணிக வளாகம்

அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 30 இடங்களில் மையங்கள் அமைக்கப்படும்.

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும்.
அனைத்து மாநில பொருள்களுக்கும் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.

மாங்கரோவ் காடுகளை பாதுகாக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

11:58 Feb 1
7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இ-கோர்ட் எனப்படும் இணையதள நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

11:56 Feb 1
பழைய வாகன ஒழிப்புக்கு கூடுதல் நிதி

2070-ஆம் ஆண்டுக்குள் வாகன புகை வெளியேற்றம் பூஜ்யமாக குறைக்கப்படும்.

பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டத்துக்கு ரூ.19,700 கோடி ஒதுக்கீடு.
வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும்.

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்துக்கு மத்திய - மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி.

11:50 Feb 1
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிசக்திக்கு மாற 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
நாட்டில் 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்க கோவர்த்தன திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இ-கோர்ட் திட்டத்துக்காக இணையதளம் உருவாக்கப்படும்.

11:45 Feb 1
பான் கார்டு இனி பொது அடையாள அட்டை

பார் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது.
ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும்.

நொடிந்துபோகும் சிறுதொழில் நிறுவனங்களுக்குப் புத்துயிர் அளிக்க தனி நிதி உருவாக்கப்படும்.

போக்கவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

11:43 Feb 1
ஏகலைவா பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் 39,000 பேர் நியமனம்.

என்ஜிஓவுடன் இணைந்து தேசிய டிஜிட்டல் நூலகத்தை வலுவுடன் கட்டமைக்க நடவடிக்கை

உணவு, விவசாயிகள் பாதுகாப்பு குறித்து இந்தியா முக்கியத்துவம்.
உடல் நலத்துக்கு முக்கியமான சிறுதானிய உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம்

அரசு ஊழியர்கள் தங்களது திறமையை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் அறிமுகம்

11:41 Feb 1
ரயில்வே அறிவிப்புகள்

நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களுக்காக 2,40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013 - 14-ஆம் ஆண்டைக் காட்டிலும் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 9 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:40 Feb 1
50 புதிய விமான நிலையங்கள்

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:40 Feb 1
இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுநீர் அகற்றம்
கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்குப் பதில் 100 சதவிகிதம் இயந்திரங்களே பயன்படுத்த முடிவு.

11:37 Feb 1
கர்நாடகத்துக்கான அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் முழக்கம்

கர்நாடகத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டபோது தேர்தலுக்கான அறிவிப்பு என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

பட்ஜெட் உரையின்போது இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்துக்கு வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி, விவசாயிகளுக்காக என்று கர்நாடகத்துக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:35 Feb 1
கர்நாடகத்துக்கு ரூ.5,000 கோடி
கர்நாடகத்துக்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

11:32 Feb 1
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 66 சதவிகிதம் அதிகரித்து ரூ.79 ஆயிரம் கோடியாக அறிவிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளுக்கான மூலதன முதலீட்டுத் தொகை
வீடு, சுகாதார, குடிநீர் வசதிகளை அனைத்துப் பழங்குடியினருக்கும் வழங்க இலக்கு.

பழங்குடியினக் குழந்தைகளுக்கான ஏகலைவா பள்ளித் திட்டம் மேம்படுத்தப்படும்.

11:28 Feb 1
வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மீனவர் நலனுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்களை பொதுட்ககள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

11:26 Feb 1
இந்த நிதியாண்டில் தோட்டக்கலைத் துறை வளர்ச்சிக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் துறை கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாய்.

11:25 Feb 1
டிஜிட்டல் நூலகம்
சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

11:25 Feb 1
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும்.
கூட்டுறவு சங்கங்களுக்கு தரவு தளம் உருவாக்கப்படும்

11:23 Feb 1
நாடு முழுவதும் தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து 157 செவிலியர் பயிற்சிகல்லூரிகள் அமைக்கப்படும்.

மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
11:22 Feb 1
எதன் அடிப்படையில் பட்ஜெட்?

அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏழு முக்கிய அம்சங்களுடன் பொது பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை ஆற்றல், கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுதானியங்களை ஊக்குவிக்க நடவடிக்கைள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11:13 Feb 1
வளர்ச்சி.. வளர்ச்சி..
உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதார வளர்ச்சி உள்ளது.
9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

11:10 Feb 1
நடப்பாண்டியில் இந்தியா 7 சதவிகித பொருளாதார வளர்ச்சியைக் காணும்.
உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன

11:03 Feb 1
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

10:49 Feb 1
மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24-க்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் மக்களவையில் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

Post a Comment

0 Comments