தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

  தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!
Click here to Download 
  தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்ட ஆசிரியர் கலந்தாய்விற்கான இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  மலைசுழற்சி வழக்கில் சீனியாரிட்டி பாதிக்க கூடாது என்பதற்காக அந்த யூனியனில் மட்டும் Appointment Date சீனியாரிட்டி போட்டு இருந்தால் மற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?
  2014 ஆம் ஆண்டு பணியில் ஆசிரியர் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கடைசி இடத்தில் இருக்கிறார். ஆனால்
2014, 2012, 2009 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்று பல்வேறு கலந்தாய்வில் கலந்து பலன் பெற்றவர்கள் மீண்டும் சீனியாரிட்டியில் மேலே இருக்கின்றனர்.

 இதுபோன்ற ஒவ்வொரு விசயத்துக்கும் ஆசிரியர் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்புகின்றனர். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் சிறிய மாற்றம் செய்து கடைசியாக பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான ஆசிரியர் நலன் பாதுகாக்கப்படும்.

   (மலைசுழற்சி யூனியனுக்கு தனியாக வழிமுறைகள் வழங்க வேண்டும்)

Post a Comment

0 Comments