நமது புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பற்றி அறிந்து கொள்ள

நமது புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பற்றி அறிந்து கொள்ள

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகனாவார். அத்துடன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும் ஆவார்.
அன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராக இருந்துவருபவர் என்றும் சொல்லப்படுகின்றது. எம்.சி.ஏ. பட்டதாரியான அன்பில் மகேஷ் மிகவும் துடிப்பான இளைஞர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகன் ஆவார். திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

     2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி அன்று பதவியேற்றார்.


தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பிறந்த தேதி : 28 Mar 1983

பிறந்த இடம் : திருச்சி

கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam

கல்வி : MCA

தொழில் : அரசியல்வாதி

தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி

தாயார் பெயர் : மாலதி

துணைவர் பெயர் : ஜனனி

துணைவர் தொழில் : குடும்ப தலைவி

தொடர்பு :

நிரந்தர முகவரி : பழைய எண் : 159 , புதிய எண் : 129 அன்பு நகர் , 9 வது குறுக்கு , கீரப்பட்டி , திருச்சி -620 012 .

Post a Comment

0 Comments