CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு பிரதமர் மோடி ஆலோசனை

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மே 4ம் தேதி முதல் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இன்று பிற்பகல் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து மாநில பாடத்திட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் வருகிற மே 4ம் தேதி முதல் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை என மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று பிற்பகல் 12 மணிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திற்கு பின்னர் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments