பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடல்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் சந்தித்துப் பேசுகிறார்.

இதுதொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'பல்வேறு துறைகளில் ஏராளமான கேள்விகள் குறித்துப் புதிய முறையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் கலந்துரையாடல். பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியை இன்று மாலை 7 மணிக்குக் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.
பரிக்சா பே சர்ச்சா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

Post a comment

0 Comments