+2, 10ம் வகுப்பு வரையான வகுப்புகளுக்கு பாடங்கள் குறைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவு

      ஈரோடு மாவட்டம், கோபி அருகே தாசப்பகவுண்டன்புதுாரில், நேற்று அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றால், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பாடங்கள் குறைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒன்று முதல், 10 வகுப்பு வரையான வகுப்புகளுக்கு, குறைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பாடங்கள் குறைப்பு பணி, தீவிரமாக நடக்கிறது.

      இப்பணிகள் முடிந்ததும், ஜூலை, 13ல், பாடப் புத்தகங்கள், முதல்வர் மூலம் வெளியிடப்படும். தமிழகம் முழுதும், அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக, பாடப் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறைப்பு பணி முடிந்த பின், எந்த வகுப்புக்கு, எந்தெந்த பாடம் குறைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும். மாணவ - மாணவியரை வரவழைத்து, பாடப் புத்தகங்கள் வழங்கினால், கூட்டம் அதிகரித்து, தொற்றுக்கு வழிவகுக்கும். அதனால், பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு எப்படி கையில் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம்.முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். அதன்பின், கல்வி சேனல் மூலம், போதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


Post a Comment

0 Comments