கொரானா பாதிப்பு நீடிப்பதால் மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா - இன்று முக்கிய ஆலோசனை

    மே18ம்‌ தேதி முதல்‌ மே 3ம்தேதி வரை 4வதுகட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியேவரும்‌ பொதுமக்கள்‌ கண்‌டிப்பாக மாஸ்க்‌ அணிந்‌திருக்க வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்‌ என்று கூறப்பட்டது. தமிழகத்தில்‌ கடைகள்‌, அலுவலகங்கள்‌,தொழிற்சாலைகள்‌ திறக்க அனுமதிக்கப்‌பட்டாலும்‌ பொது போக்குவரத்தான விமானம்‌, ரயில்‌, பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்‌ளிட்ட சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இந்நிலையில்‌ நேற்று (23ம்‌ தேதி) முதல்‌ விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்‌ளது. தமிழகத்திலும்‌ சில விமானங்கள்‌ இயக்கப்படுகிறது. 


     சென்னை தவிரபிற மாவட்டங்களில்‌ ரயில்‌ போக்குவரத்துக்கும்‌ தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்‌ நேற்று முன்தினம்‌ முதல்‌ ஆட்டோக்களை இயக்கவும்‌ அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும்‌, சென்னையில்‌ கொரோனா நோயாளிகளின்‌ எண்ணிக்கை தினசரி உச்சத்தை தொட்‌டபடியே உள்ளது. சென்‌னையில்நேற்று ஒரே நாளில்‌ 362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்‌பட்டது. தமிழகத்தில்‌ இதுவரை சுமார்‌ 16,800  பேர்‌ கொரோனா பாதிப்‌புக்கு உள்ளாகியுள்ளனர்‌. 720 பேர்‌ இறந்துள்ளனர்‌. சென்னையில்‌ நேற்று முன்‌தினம்‌ இரவு முதல்‌ நேற்று காலை வரை 8 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌.  இந்த பரபரப்பான சூழ்‌ நிலையில்‌ தமிழகத்‌தில்‌ அறிவிக்கப்‌பட்ட 4வது கட்ட ஊரடங்கு முடிய இன்னும்‌ 3 நாட்‌களே உள்ளன. விமானம்‌, ரயில்‌, ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில்‌ மக்கள்‌ அதிகம்‌ எதிர்பார்க்கும்‌ பேருந்து சேவை மற்றும்‌ மின்சார ரயில்‌ சேவை, வழிபாட்டு தலங்களில்‌ பிரார்த்தனை செய்ய அனுமதி அளிப்பது உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்‌கப்படவில்லை.


    இதுபோன்ற பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா அல்‌லது தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து, முதல்வர்‌ எடப்பாடி பழனிசாமி இன்று காலை 1!/ மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில்‌ இருந்தபடி மருத்துவ நிபுணர்களுடன்‌ அலோசனை நடத்த உள்ளார்‌. தமிழகத்தில்‌ கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவும்‌, அரசுக்கு அலோசனை வழங்கவும்‌ ௧௯ மருத்துவர்களை கொண்ட நிபுணர்‌ குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த குழுவினருடன்‌ அலோசனை பெற்றுதான்‌ ஓவ்‌வொரு முறையும்‌ தமிழகத்தில்‌ ஊரடங்கை நீட்டிப்பது மற்றும்‌ படிப்படியான தளர்வுகளை முதல்வர்‌ எடப்பாடி அறிவித்து வருகிறார்‌. அதன்படி, மருத்‌துவநிபுணர்களுடன்‌ இன்று நேரிலும்‌, வீடியோ கான்பரன்சிங்‌ மூலமும்‌ முதல்வர்‌ எடப்பாடி அலோசனை நடத்துவறார்‌.இந்த ஆலோசனையின்போது மருத்துவர்‌கள்‌ அரசுக்கு வைக்கும்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையிலேயே அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள்‌ அல்‌லது ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்க வாய்ப்‌புள்ளது. குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில்‌, குறைந்த பயணிகளுடன்‌ பேருந்து களைஇயக்க ஜூன்‌ 1ம்‌ தேதி முதல்‌ அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


    அடுத்தடுத்தநாட்களில்‌ அனைத்து மாவட்ட கலெக்‌டர்கள்‌ மற்றும்‌ அமைச்சர்‌கள்‌, மூத்த ஐஏஎஸ்‌ அதிகாரிகளுடனும்‌ முதல்வர்‌ அலோசனை நடத்த உள்‌ளார்‌. அதன்பிறகு, இந்த வாரஇறுதியில்‌ தமிழகத்தில்‌ 5வது கட்ட ஊரடங்காக மேலும்‌ ஜூன்‌ 14ம்‌ தேதி வரை நீடிப்பதுடன்‌ கூடுதலாக சில தளர்வுகளையும்‌ அறிவிக்க முதல்வர்‌ எடப்‌பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம்‌, பிரதமர்‌ மோடியும்‌ இன்‌னும்‌ ஒரு சில நாட்களில்‌ அனைத்து மாநில முதல்‌வர்களுடன்‌ அலோசனை நடத்த உள்ளார்‌. அப்‌போது, ஊரடங்கை நீட்டிப்‌பதா, வேண்டாமா என்று கருத்து கேட்பார்‌. 


Post a Comment

0 Comments