மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்கள் தயக்கம்

       சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் , மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்கள் தயக்கம் காட் டுவதாக பெற்றோர்கள் - குற்றம் சாட்டியுள்ளனர் . தமிழகத்தில் எஸ் எஸ் எல்சி , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத் தேர்வு கள் நடத்தப்பட்டு வரு கின்றன .

   அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது . முன்ன தாக , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய் முறைத் தேர்வு அடுத்த வாரத்தில் நடைபெற வுள்ளது . பொதுத் தேர் வுக்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறையும் , தேர்வுத்துறையும் ஈடுபட்டு வருகின்றனர் .

    முதற்கட்டமாக , பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப் பட்டு , இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது . இதனிடையே , மாணவர் - கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க , அவர்களின் தங்களது பாடத்தில் 100 சதவீத தேர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே , வருகைப்பதிவை காரணம் காட்டி மெல்லகற்கு மாணவரகளை பொதுத் தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது : உடல் நல பாதிப்பு குடும்ப பிரச்னை உள் ளிட்ட காரணத்திற்காக சில மாணவர்கள் தொட விடுமுறை எடுத்துள்ளனர் இதனால் , அவர்களுக்கு மட்டும் போதுமான வருகைப்பதிவு இல்லாம இருக்கலாம் . இதனை காரணம் காட்டி , மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க மறுப்பது வேதனையளிக்கிறது .

     குறிப்பிட்ட சில பள்ளிக ளைச் சேர்ந்த ஆசிரியர் கள் , தங்களது வகுப்பில் 100 சத வீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ப தற் காக , இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப டுகின்றனர் . குறிப்பாக , வேளாண்மை போன்ற தொழிற்கல்வி பயிற்றுவிக் கும் ஆசிரியர்கள் , மெல்ல கற்கும் மாணவர்களிடம் தேர்வு பயத்தை உருவாக்கி , பொதுத் தேர்வை எழுத வேண்டாம் என அச்சுறுத் துகின்றனர் . சம்பந்தப்பட்ட விடு முறைக்கான காரணம் குறித்து , பெற்றோர்கள் தலைமை ஆசிரியர்க ளுக்கு விளக்கம் அளித் துள்ளனர் . இதனை ஏற்று தலைமை ஆசிரியர்கள் அனுமதி வழங்கினாலும் , வகுப்பு ஆசிரியர்கள் ஏற்க மறுக்கின்றனர் . இதனால் , மெல்ல கற்கும் மாணவர் கள் பொதுத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட் டுள்ளது . எனவே , கல்வித் துறை இது குறித்து நடவ டிக்கை எடுத்து , அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் . இவ் வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர் .


Post a Comment

0 Comments